20 ஆவது திருத்தம் தொடர்பாக ஆராய்ந்த குழுவின் மறுசீரமைப்புகளையேனும் அதனை நிறைவேற்றுவதற்கு முன்னர் அதில் உள்ளடக்காவிட்டால் பிரச்சினைக்குரிய சூழல் உருவாகும் அபாயம் உள்ளதாக மகா சங்கத்தின் அஸ்கிரிய பீடத்தினர் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட சிலர் அஸ்கிரிய பீடத்தின் தேரர்களை சந்தித்த போதே மகா சங்கத்தினர் அதனை தெரிவித்துள்ளனர். நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவரான கரு ஜயசூரிய அஸ்கிரிய பீட மகா சங்கத் தேரர்களிடம் ஆசி பெற்றார். அவர்கள் மல்வத்து மகா சங்கத்தினரையும் சந்தித்து ஆசி பெற்றதுடன், 20 ஆவது திருத்தம் தொடர்பான தமது நிலைப்பாட்டைக் கூறியுள்ளனர்.