Header image alt text

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஏற்பாட்டில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த போராட்டம் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 11 மணிக்கு இடம்பெற்றுள்ளது. போராட்டத்தில் கலந்து கொண்ட சிறுவர்களும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும், இராணுவத்தினராலும் துணை இராணுவக் குழுவினரால் கடத்தப்பட்டும், கைது செய்யப்பட்டும் காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்று கண்ணீருடன் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். Read more

சிறுவர் தினத்தை முன்னிட்டு அம்பாறையிலும் இன்று சிறுவர் தினத்தை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது வலிந்து காணாமலாக்கப்பட்ட எமது சிறுவர்கள் எமது கைவந்து சேரும் வரை சிறுவர்கள் தினம் எமக்கு கரி நாளே என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார். மேலும், 10 வருடத்திற்கு முன்னர் யுத்தத்தின்போது சரணடைந்த எங்கள் குழந்தைகள் எங்கே?, சிறுவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய இலங்கை அரசு எமது சிறார்களை காணாமலாக்கியுள்ளது, Read more

யாழ்ப்பாணம் நீர்வேலி சந்திக்கு அண்மையாக உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் தனு ரொக் வாள் வெட்டு குழுவின் தலைவராக கருதப்படும் தனுவின் நண்பன் மீது சராமாரியாக வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது. இதன்போது மகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்றைய தினம் சிறுவர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து கறுப்புக் கொடிகளுடன் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017 ம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 1,303வது நாளாகவும் சுழற்சி முறையில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. Read more

20 ஆவது திருத்தம் தொடர்பாக ஆராய்ந்த குழுவின் மறுசீரமைப்புகளையேனும் அதனை நிறைவேற்றுவதற்கு முன்னர் அதில் உள்ளடக்காவிட்டால் பிரச்சினைக்குரிய சூழல் உருவாகும் அபாயம் உள்ளதாக மகா சங்கத்தின் அஸ்கிரிய பீடத்தினர் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட சிலர் அஸ்கிரிய பீடத்தின் தேரர்களை சந்தித்த போதே மகா சங்கத்தினர் அதனை தெரிவித்துள்ளனர். நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவரான கரு ஜயசூரிய அஸ்கிரிய பீட மகா சங்கத் தேரர்களிடம் ஆசி பெற்றார். அவர்கள் மல்வத்து மகா சங்கத்தினரையும் சந்தித்து ஆசி பெற்றதுடன், 20 ஆவது திருத்தம் தொடர்பான தமது நிலைப்பாட்டைக் கூறியுள்ளனர்.