முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்பார்த்திருந்தாகவும் ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது அதற்கொரு கருப்பு புள்ளியாக அமைந்துவிட்டதாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அத்தோடு, அப்போதைய ஜனாதிபதியும் காவல்துறைமா அதிபர் ஆகியோரின் கண்மூடித்தனமான செயற்பாடுகளே இந்த தாக்குதல் சம்பவத்திற்கு காரணமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் உடனடியாக பிரதமர் ஒரு அவசர கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்ததாகவும் ஆனால் அப்போதைய நெருக்கடி நிலையை முன்னிருத்தி அதில் கலந்துகொள்ள வேண்டாமென முன்னாள் ஜனாதிபதி தனக்கும் அப்போதைய ஜனாதிபதி செயலாளருக்கும் எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.