கிளிநொச்சி கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டுக் கழகத்தின் கற்பகசமர் காற்பந்து தொடரின் இறுதிப் போட்டி இன்றையதினம் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். இதன்போது 2019ம் ஆண்டின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபாய் 250,000ஃ- பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் நிர்மாணிக்கப்பட்ட களஞ்சிய அறை பாராளுமன்ற உறுப்பினரால் திறந்துவைக்கப்பட்டது. நிகழ்வில் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மத்தியகுழு உறுப்பினர்கள் வே. சிவபாலசுப்பிரமணியம், அ.கௌதமன், கல்விச் சமூகத்தினர், கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டுக் கழகத்தினர், ஊர்ப் பெரியார்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.