இலங்கையில் ஒவ்வொரு வருடமும் மார்பக புற்றுநோய் காரணமாக சுமார் 700 பேர் வரையில் மரணமடைவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் சமூக விசேட வைத்திய நிபுணர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார். நேற்று சுகாதார கல்விப் பணிமனையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், வருடாந்தம் நாட்டில் 3,500 மார்பக புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும் அவர்களில் 50 பேர் ஆண்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.