Header image alt text

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்குமான 2 ஆம் தவணைக்கான விடுமுறை நாளை முதல் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்குமான 2 ஆம் தவணைக்கான விடுமுறை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (09) முதல் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. Read more

கம்பஹா மாவட்டத்திலுள்ள கல்வி நிறுவனங்கள் நாளை முதல் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளன. களனி பல்கலைக்கழகம், கம்பஹா விக்ரமாரச்சி ஆயுர்வேத மருத்துவ கல்லூரி, நைவல உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஆகியன ஒரு வாரத்திற்கு மூடப்படுவதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதனை முன்னிட்டு விடுதிகளிலிருந்து வெளியேறுமாறு மாணவர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. Read more

கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட கம்பஹா திவுலபிடிய பகுதியை சேர்ந்த 39 வயதான பெண்ணின் மகளுக்கும் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 39 வதான பெண் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனையின் போதே அவரது மகளுக்கும் கொரோனா தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. Read more

மறு அறிவித்தல் வரை சகல தனியார் மற்றும் இ.போ.ச பஸ்களில் ஆசன எண்ணிக்கைகளுக்கு அமைய மாத்திரம், பயணிகளை ஏற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதென, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். உடன் அமுலுக்கு வரும் வகையில், இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். Read more

குற்ற விசாரணைப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றிய நுவன் வெதசிங்க, மேல்மாகாணத்தின் வடக்கு பிரிவுக்குப் பிரிவு பதில் பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றப்பட்டுள்ளார். அதேபோல் பிரதி பொலிஸ்மா அதிபரான, எஸ்.பி. ரணசிங்க, குற்ற விசாரணைப் பிரிவின் புதிய பிரதி பொலிஸ்மா அதிபராக உடன் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார். Read more

கம்பஹா மாவட்டம் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை பெண் பணியாளருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில், அங்கு பணி புரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்கள் இருவர் உட்பட அவர்களுடன் தொடர்புடையவர்கள் என 20 பேர் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர். வேலணை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள மாநகர சபைகளின் முதல்வர்கள் பங்குபற்றும் வருடாந்த மாநாடு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்றது. இலங்கை உள்ளூராட்சி மன்ற ஒன்றியங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், பிரதம நிறைவேற்று அதிகாரி திருமதி கேமந்தி குணசேகர நெறிப்படுத்தலில், யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் குறித்த மாநாடு இடம்பெற்று வருகின்றது. Read more

யாழ். வேலணை பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட அல்லைப்பிட்டி, வெண்புறவிநகர் கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்து. கடந்த மாதம் 30ம் திகதி இந்தியா தமிழ்நாடு, இராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவர் கடலில் தவறி விழுந்திருந்ததாகவும், குறித்த சடலம் அவருடையதாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக ஊர்காவல்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 புதிய கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட திவுலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் பணிபுரிந்த ஆடைத்தொழிற்சாலையில், 400 பேர் வரை சேவையாற்றுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த தொழிற்சாலை, மினுவாங்கொட- யக்காதுவ பிரதேசத்தில் உள்ள முன்னணி ஆடைத்தொழிற்சாலை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் கொரோனா தொற்றாளராக உறுதிப்படுத்தப்பட்டுள்ள பெண்ணுடன் ஒன்றாக பயணித்த, 40 பேர், சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். Read more

கம்பஹா, திவுவுலுப்பிட்டியவில் 39 வயதான பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அப்பெண், கொழும்பு ஐடிஎச் க்கு மாற்றப்பட்டுள்ளார் என அரசாங்கத் தகவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. காய்ச்சல் காரணமாக அந்தப் பெண், கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதனையடுத்தே, அப்பெண்ணுக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. Read more