கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட கம்பஹா திவுலபிடிய பகுதியை சேர்ந்த 39 வயதான பெண்ணின் மகளுக்கும் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 39 வதான பெண் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனையின் போதே அவரது மகளுக்கும் கொரோனா தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் 16 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை திவுலப்பிட்டிய பகுதியில் 180 பேர் மற்றும் மினுவங்கொட பகுதியை சேர்ந்த 250 பேர் உள்ளிடங்களாக 430 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.