குற்ற விசாரணைப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றிய நுவன் வெதசிங்க, மேல்மாகாணத்தின் வடக்கு பிரிவுக்குப் பிரிவு பதில் பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றப்பட்டுள்ளார். அதேபோல் பிரதி பொலிஸ்மா அதிபரான, எஸ்.பி. ரணசிங்க, குற்ற விசாரணைப் பிரிவின் புதிய பிரதி பொலிஸ்மா அதிபராக உடன் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், குற்ற விசாரணைப் பிரிவு முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்கு அமைவாக, கைதுசெய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட்டின் சகோதரர் 8 மாதங்களின் பின்னர், விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.