மறு அறிவித்தல் வரை சகல தனியார் மற்றும் இ.போ.ச பஸ்களில் ஆசன எண்ணிக்கைகளுக்கு அமைய மாத்திரம், பயணிகளை ஏற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதென, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். உடன் அமுலுக்கு வரும் வகையில், இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இதேவேளை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பயணிகள் முகக்கவசம் அணிதல் முக்கியமானது என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், நாட்டில் காணப்படும் அச்சுறுத்தலான நிலைமை காரணமாக பாதகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் புகையிரத திணைக்களம் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.