கம்பஹா மாவட்டம் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை பெண் பணியாளருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில், அங்கு பணி புரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்கள் இருவர் உட்பட அவர்களுடன் தொடர்புடையவர்கள் என 20 பேர் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர். வேலணை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.