இலங்கையில் உள்ள மாநகர சபைகளின் முதல்வர்கள் பங்குபற்றும் வருடாந்த மாநாடு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்றது. இலங்கை உள்ளூராட்சி மன்ற ஒன்றியங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், பிரதம நிறைவேற்று அதிகாரி திருமதி கேமந்தி குணசேகர நெறிப்படுத்தலில், யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் குறித்த மாநாடு இடம்பெற்று வருகின்றது. குறித்த முதல்வர்கள் மாநாட்டில் இலங்கையில் உள்ள 24 மாநகர சபைகளின் முதல்வர்களில் 18 மாநகர சபை முதல்வர்கள் கலந்துகொண்டுள்ள போதும் 6 மாநகர சபைகளின் முதல்வர்கள் பங்குபற்றி இருக்கவில்லை.

கொழும்பு, அக்கரைப்பற்று, நுவரெலியா, கல்முனை,பண்டாரவளை மற்றும் தெகிவளை-கல்கிசை ஆகிய மாநகர சபைகளின் முதல்வர்களே குறித்த மாநாட்டில் பங்குபற்றியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.