கொரோனா தொற்றுகுள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அங்கிருந்து வெளியேறியுள்ளார். வைத்தியசாலையில் இருந்து மகிழுர்ந்தில அவர் வெளியேறும் காணொளி பதிவு வெளியாகியுள்ளது. இதன்போது, வீதியின் இருமருங்கிலும் இருந்த அவரின் ஆதரவாளர்கள் டொனால்ட் ட்ரம்புக்கு ஆரவாரம் தெரிவித்து வரவேற்றுள்ளனர். கொவிட்-19 தொற்றுதியான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வோல்டர் ரீட் வைத்திய மையத்தில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். இன்று அவர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறக்கூடும் என வெள்ளை மாளிகை முன்னதாக அறிவித்திருந்தது. இந்நிலையில், வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய அவர், ஆதரவாளர்களுக்கு ஆச்சரியமான வருகையை வெளிப்படுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.