Header image alt text

ஒரு நாள் சேவையினூடாக தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடைமுறையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஆட்பதிவு திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய நாளை, நாளை மறுதினம் மற்றும் எதிர்வரும் 09 ஆம் திகதிகளில் தேசிய அடையாள அட்டை விநியோகத்திற்கான ஒரு நாள் சேவை முன்னெடுக்கப்பட மாட்டாது என ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார். Read more

கல்வி பொதுத்தராதர உயர்தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளை நடாத்துவதற்கான அனைத்து பூர்வாங்க நடவடிக்கைகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். Read more

மினுவங்கொட தொழிற்சாலையின் மேலும் 246 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன், இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் சேர்ந்து 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி கூறியுள்ளார். Read more

 யாழ்மாவட்டத்தில் புங்குடுதீவு பிரதேசத்தை வதிவிடமாக கொண்ட மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய இளம் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருடன் பேருந்தில் பயணித்த 15 பேர் தொடர்புகொண்டு தம்மை பாதுகாத்துக் கொண்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more

கிளிநொச்சியில் நான்கு குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். கம்பஹா மினுவாங்கொடை தொழிற்சாலையில் பணிபுரியும் இரு சகோதரிகளின் குடும்பம், பிறிதொரு தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்ணின் குடும்பம், புங்குடுதீவு பெண்ணின் திருமண பேச்சுக்கு சென்ற இரு குடும்பங்கள் உட்பட நான்கு குடும்பங்களே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். Read more

திவுலப்பிட்டிய, மினுவங்கொட மற்றும் வெயங்கொட ஆகிய பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதிகளை ஊடறுத்து தூர இடங்களுக்குச் சேவையில் ஈடுபடும் பஸ்கள், அப்பகுதிகளில் நிறுத்தாது பயணத்தை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், மேற்படி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், பயணிகளை ஏற்ற இடமளிக்கப்படாதெனவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பின்தங்கிய கிராம அபிவிருத்தி மற்றும் தேசிய கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு வர்த்தக பயிர்செய்கை அபிவிருத்தி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் பதவிப்பிரமாணம் செய்துள்ளார். இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, கம்பாஹாவிலிருந்து வெயங்கொட வரை உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் எந்த ரயில்களையும் நிறுத்தாமல் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கம்பாஹா ரயில் நிலையத்தில் ரயில்கள் நிறுத்தப்படும் என்பதோடு வெயங்கொட ரயில் நிலையத்தில் நிறுத்தப்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Read more

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கான வழக்கு விசாரணைகளை காணொளி தொழில்நுட்பமூடாக நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர்களுக்கு அறிவித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more

கொழும்பு மட்டக்களப்பு பிரதான வீதி சத்துருக்கொண்டான் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றுமுன்தினம் (04) இடம்பெற்ற வாகன விபத்தில், தன்னாமுனை விபுலானந்தபுரத்தைச் சேர்ந்த 38 வயதுடைய ஞானசிங்கம் ஜீவானந்தம் என்பவரே உயிரிழந்துள்ளார். ஏறாவூர் பகுதில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த காரும் மட்டக்களப்பில் இருந்து ஏறாவூர் பகுதிக்கு பயணித்த மோட்டர்சைக்கிளும் நேற்று இரவு, நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. Read more