கிளிநொச்சியில் நான்கு குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். கம்பஹா மினுவாங்கொடை தொழிற்சாலையில் பணிபுரியும் இரு சகோதரிகளின் குடும்பம், பிறிதொரு தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்ணின் குடும்பம், புங்குடுதீவு பெண்ணின் திருமண பேச்சுக்கு சென்ற இரு குடும்பங்கள் உட்பட நான்கு குடும்பங்களே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வரும்முன் பாதுகாக்கும் திட்டத்துடன் சுய தனிமைப்படுத்தல் மற்றும் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் மக்கள் தேவையற்ற வீண் அச்சம் கொள்ளத்தேவையில்லை என சுகாதார துறையினர் அறிவித்துள்ளனர்.