கொழும்பு மட்டக்களப்பு பிரதான வீதி சத்துருக்கொண்டான் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றுமுன்தினம் (04) இடம்பெற்ற வாகன விபத்தில், தன்னாமுனை விபுலானந்தபுரத்தைச் சேர்ந்த 38 வயதுடைய ஞானசிங்கம் ஜீவானந்தம் என்பவரே உயிரிழந்துள்ளார். ஏறாவூர் பகுதில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த காரும் மட்டக்களப்பில் இருந்து ஏறாவூர் பகுதிக்கு பயணித்த மோட்டர்சைக்கிளும் நேற்று இரவு, நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இதன்போது, மோட்டர் சைக்கிள் பயணித்தவர், படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளார். மேலும், காரை ஒட்டிச் சென்றவரை கைது செய்து, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் நேற்றையதினம், பொலிஸார் ஆஜர்படுத்தியபோது, அவரை எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.