திவுலப்பிட்டிய, மினுவங்கொட மற்றும் வெயங்கொட ஆகிய பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதிகளை ஊடறுத்து தூர இடங்களுக்குச் சேவையில் ஈடுபடும் பஸ்கள், அப்பகுதிகளில் நிறுத்தாது பயணத்தை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், மேற்படி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், பயணிகளை ஏற்ற இடமளிக்கப்படாதெனவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.