கல்விப் பொதுத் தராதர உயர்தரம், புலமைப் பரிசில் ஆகிய இரண்டு பரீட்சைகளும் திட்டமிட்டப்படி, குறிக்கப்பட்ட திகதிகளில், சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி நடைபெறுமென கல்வியமைச்சர் ஜி.எல் பீரிஸ் அறிவித்துள்ளார்.அரசாங்கத் த​கவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.