கொரோனா தொற்று காரணமாக பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.கோட்டை முதல் ராகம, கம்பஹா, மீரிகம மற்றும் அம்பேபுஸ்ஸ நோக்கி பயணிக்கும் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸினால் கம்பஹா மாவட்டத்தின் சில பொலிஸ் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டமையே இதற்கான காரணமெனவும் ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.