கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில், சிலாபம்-அபகந்தவில பகுதியில்,  ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.மேற்படி தொற்றாளர், வேறு ஒரு நோய்க்கு சிகிச்சைப் பெறுவதற்காக, கடந்த 06 ஆம் திகதி,  சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து. அவருக்கு  மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின்போதே, தொற்று இருப்பது இன்று (08) உறுதியாகியுள்ளது.