தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மீண்டும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.எவ்வாறாயினும், கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் மற்றும் கொறடா பதவிகள் தொடர்பில் பங்காளிக் கட்சிகளுக்கு இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு நேற்று கூடியபோது புதிய பதவிகளின் தெரிவுகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.

இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் பாராளுமன்ற குழுத் தலைவராகவும் இரா.சம்பந்தன் தொடர்ந்தும் செயற்படுவதற்கு உறுப்பினர்கள் ஏகமனதாக சம்மதம் தெரிவித்துள்ளனர்.

கூட்டமைப்பின் புதிய பேச்சாளர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்மொழிய, அதனை பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வழிமொழிந்துள்ளார்.