மினுவாங்கொடை Brandix தொழிற்சாலை ஊழியர்களை சந்தித்த மேலும் 10 பேருக்கு COVID-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.இதற்கமைய, மினுவாங்கொடை கொத்தணியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,044 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரை 4,469 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அவர்களில் 3,278 பேர் குணமடைந்துள்ளனர்.

1,178 நோயாளர்கள் தற்போது மருத்துவ சிகிச்சைகளைப் பெற்று வருகின்றனர்.