நாட்டில் 18 பொலிஸ் அதிகார பிரிவுகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதும் நாட்டில் அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று அவதான நிலைமை காணப்படுவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.மேலும் பண பரிவர்த்தனையின் போது கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவும் அவதானம் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன் காரணமாக பண பரிவர்த்தனையின் போது மிகவும் கவனமாக செயற்படுமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்று தனக்கு ஏற்பட்டுள்ளது என சந்தேகம் இருந்தால் அது தொடர்பில் அச்சம் கொள்ளாமல் உடனடியாக சுகாதார பிரிவினருக்கு அறிவிக்குமாறு கொரோனா வைரஸ் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.

சுகாதாரப் பிரிவினரால் பெற்று கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் உரிய முறையில் பின்பற்றப்படாமை காரணமாக நாட்டினுள் மீண்டும் கொரோனா பரவ ஆரம்பித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.