கொழும்பு  சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் போதனா வைத்தியசாலையின் சுகாதார அலுவலக பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.குறித்த ஊழியரை IDH வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளதாக சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜீ.விஜேசூரிய தெரிவித்தார்.

அவர் பணியாற்றிய பிரிவில் ஏனைய ஊழியர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கான PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக டொக்டர் ஜீ.விஜேசூரிய குறிப்பிட்டார்.

சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் போதனா வைத்தியசாலையின் சுகாதார பாதுகாப்பிற்கான அனைத்து பூர்வாங்க நடவடிக்கைகளும் உரிய வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.