இலங்கைக்கு சீனா 600 மில்லியன் யுவான் நிதி உதவியை வழங்கியுள்ளது. இலங்கை – சீனா இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையில் அண்மையில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.யெங் ஜியெச்சி தலைமையிலான சீன இராஜதந்திர குழுவின் இலங்கை விஜயத்திற்கு இணையாக கைச்சாத்திடப்பட்ட இந்த உடன்படிக்கைக்கு அமையவே சீனா 600 மில்லியன் யுவானை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

இத்தகைய அத்தியவசிய தருணத்தில் நிதி உதவி வழங்கியமை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் சீனாவிற்கு நன்றி தெரிவித்துள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது.