மன்னார் மாவட்டத்தின் பட்டித்தோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.COVID – 19 தொற்று ஒழிப்பு தொடர்பான தேசிய செயலணியின் தலைமை அதிகாரி, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை அறிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வௌியிட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் அனலைதீவு மற்றும் காரைநகர் ஆகிய பகுதிகளில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டமையால் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு இன்றுடன் நீக்கப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்பட்ட இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்படாமையால் அங்கு பிறப்பிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவதற்கு முன்னர் இரண்டு நோயாளர்கள் தம்புள்ளை விசேட பொருளாதா மத்திய நிலையத்திலுள்ள 80 கடைகளுக்கு சென்றுள்ளனர்.