தனியார் மற்றும் அரச ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்களை எதிர்வரும் 3 நாட்களுக்குள் அறியத்தருமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.எதிர்வரும் 3 நாட்களுக்குள் தகவல்களை அறியத்தருமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பிரென்டிக்ஸ் நிறுவன ஊழியர்களின் சில ஊழியர்களின் விலாசங்கள் உள்ளிட்ட தகவல்கள் போலியானதாக காணப்பட்டதால், குறித்த ஊழியர்கள் தொடர்பிலான​
தகவல்களை அறிவதற்கு சிரமங்களை எதிர்கொண்டதாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அனைத்து நிறுவனங்களும் தமது ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்களை மீள புதுப்பிக்குமாறு அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

விலாசங்கள், தற்காலிக விலாசங்கள், தொலைபேசி இலக்கங்கள், உள்ளிட்ட தகவல்கள் கட்டாயம் மீள புதுப்பிக்கப்படல் வேண்டும் எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.