கொள்ளுபிட்டி பிரண்டிக்ஸ் நிறுவன ஊழியர்கள் 7 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இவர்கள் அனைவரும் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன் மினுவங்கொட பிரண்டிக்ஸ் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் தனிமைப்படுப்பட்டு இருந்த நிலையிலேயே கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

அத்துடன் கொழும்பு யூனியன் பிளேஸ் அதிசொகுசு அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் தங்கியிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரின் குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.