நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 4,844 ஆக அதிகரித்துள்ளது.இவர்களில் 1,514 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொற்றுக்குள்ளானோரில் 3,317 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

கொத்தணியில் நேற்றைய தினம் (12) 90 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அதற்கமைய, மினுவாங்கொடை கொத்தணியில் இதுவரை 1,397 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.