நாட்டில் தற்போது காணப்படும் நிலையை கருத்தில்கொண்டு 2000 பேரை தனிமைப்படுத்தும் வகையிலான நிலையங்கள் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகள் விரைவுப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 96 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 10,500 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இதுவரை தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த 51 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் அங்கிருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.