மத்துகம நகரை அண்மித்த பகுதிகளில் மூவர், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக வலலாவிட்ட பொது சுகாதார அதிகாரிகள் காரியாலயம் தெரிவித்துள்ளது.இதற்கமைய,  யட்டதொல- பதுகமை தனியார் பஸ் வண்டியின் சாரதி  ஒருவருக்கும் அதன்  நடத்துனருக்கும் கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, களுத்துறை நாகொடை பொது வைத்தியசாலையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மத்துகம- பெலவத்தை பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியான நிலையில், இப் பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்  அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.