அண்மையில் இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் தீப்பற்றிய நியு டயமன்ட் கப்பலின் மாலுமியிடமிருந்து, 12 மில்லியன் ரூபாய் அபராதமாக அறவிடப்பட்டுள்ளது.கொழும்பு மேல்நீதிமன்றத்தால் இந்த அபராதத் தொகை அறவிடப்பட்டுள்ளது.

கடல் சுற்றாடல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்ட தீப்பரவலை தடுக்காமை உள்ளிட்ட  குற்றச்சாட்டுகளை கப்பலின் மாலுமி ஏற்றுக்கொண்டுள்ளதால், இந்த அபராதத் தொகை அறவிடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த கப்பலுக்குரிய நிறுவனத்திடமிருந்து 200 மில்லியன் ரூபாய் நட்டஈட்டை எதிர்பார்ப்பதாகவும் சட்டமா அதிபர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.