மேலும் 06 அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் பதிவுசெய்யப்பட்டுள்ளன.அருணலு ஜனதா பெரமுன / ஜனதா சேவக கட்சி / புதிய ஜனநாயக மார்க்சிஸ்ட் லெனினிசக் கட்சி / பிவித்துரு ஹெல உருமய / சமத்துவ கட்சி மற்றும் சிங்கள ராவய ஆகிய கட்சிகளே பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வருடத்தில் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜனவரி மாதம் கோரப்பட்டிருந்தன.

அதற்கமைய 154 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

அடிப்படை பரிசீலனைகளின் பின்னர் 121 கட்சிகளுடன் நேர்காணல் இடம்பெற்று அதில் குறித்த ஆறு கட்சிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.