கொழும்பு மாநகர சபையின்  பொதுமக்கள் சேவைகள் இரண்டு வாரங்கள் வரை இடம்பெறமாட்டாதென,  மாநகர ஆணையார் ரோஹினி திஸாநாயக்க தெரிவித்தார்.எனினும், அலுவலக ​சேவைகள் வழமைப்போன்று இடம்பெறுமெனவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபையின் கீழ் இயங்கும், டீன்ஸ் வீதி, மருதானை  என்ற முகவரியில் அமைந்துள்ள, பொதுமக்கள் அறக்கட்டளை திணைக்கள அலுவலகத்தை இரண்டு வாரங்கள் வரை மூட நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அங்கு பொதுமக்கள் சேவை இரண்டு வாரங்கள் இடம்பெறாதெனவும்,  மாநகர ஆணையார் ரோஹினி திஸாநாயக்க தெரிவித்தார்.