கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் என உறுதிசெய்யப்பட்ட நபர்கள் பயணித்த 06 பஸ்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கொழும்பில் நேற்று (14) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் போக்குவரத்து அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

கொழும்பு-மெதகம (ND 4890)

மாக்கும்புர- காலி  (MD 2350)

கடவத்த- அம்பலாங்கொட (MG 0549)

கொழும்பு- யாழ்ப்பாணம் (ND 6503)

எல்பிட்டிய- கொழும்பு (ND 9788)

காலி-கடவத்த (NF 7515)

சொகுசு பஸ்களில் பயணிக்கும் பயணிகளை பஸ்ஸில் ஏற்றுவதற்கு முன்னர் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தற்போது பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.