திருகோணமலை – மட்டக்களப்பு வீதியில் கங்கை பாலத்தில் இன்று (15) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.இறந்தவர் ஈச்ந்தீவு, ஆலங்கேனி, கிண்ணியாவை பிறப்பிடமாகவும் மூதூர், மல்லிகைத் தீவு, பெருவெளி பிரதேசத்தில் வசிப்பிடமாகவும் உடைய தர்மசேனன் நித்தியரூபன் (வயது 37) என மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மூதூரில் இருந்து தம்பலகாமம் ஆடைத் தொழிச்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸூம் கிண்ணியாவில் இருந்து மூதூர் நோக்கிச் சென்ற மோட்டார் இருசக்கர வாகனமும் கங்கை பாலத்தில் நேருக்கு நேர் சந்தித்த வேலையில் வேகத்தை கட்டுப்படுத்த இயலாத மோட்டார் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவர்.

முதலில் பஸ்ஸூடன் மோதி பின்பு கங்கை பாலத்தின் அலுமினிய தடுப்புடன் மோதியதில் விபத்து ஏற்பட்டு மோட்டார் இருசக்கர வாக ஓட்டுனர் ஸ்தலத்தில் பலியானதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மூதூர் தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லபடவுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணையை மூதூர் பொலிஸார் மேற்கொள்கின்றனர்.