ஹட்டன் நஷனல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்  ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக குறித்த வங்கி அறிவித்துள்ளது.மருதானையில் அமைந்துள்ள இந்த கட்டிடத்தின் 19 ஆவது மாடியில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கே தொற்ற உறுதியாகியுள்ளது.

அந்த மாடியில் பணியாற்றிய அனைவரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.