கொரோனா தொற்று காரணமாக சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் தங்களுடைய உறவினர்களுடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.சிறைச்சாலை கைதிகளை பார்ப்பதற்காக அவர்களது குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு கொரோனா தொற்று காரணமாக தற்காலிகாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அதற்கு சலுகை வழங்கும் விதமாக இந்த நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.