மினுவங்கொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புபட்ட, மேலும் 61 பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதென. அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.இவர்களில் 58 பேர், தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு இருந்தவர்கள் என்றும் ஏனைய மூவரும், அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த நிலையில், அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும், திணைக்களம் தெரிவித்துள்ளது.