அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம், இம்மாதம் 21ஆம் 22ஆம் திகதிகளில், இரவு 7.30 மணி வரை தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில், இன்று (16) பிற்பகல் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு, இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

இதன்படி, 21ஆம் 22ஆம் திகதிகளில், முற்பகல் 10 மணி முதல் மாலை 7.30 மணி வரையில், இந்த விவாதம் நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.