தொடர்ச்சியாக அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் முகமாக ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளின் கூட்டம் இன்றுகாலை யாழ். நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது.இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ சுமந்திரன், சி.சிறிதரன், த.கலையரசன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஈ.சரவணபவன், என்.சிறிகாந்தா, எம்.கே. சிவாஜிலிங்கம் மற்றும் விந்தன் கனகரட்ணம், சபா குகதாஸ், க.அருந்தவபாலன், சிற்பரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், பொ.ஐங்கரநேசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ.சுமந்திரன் கலந்து கொண்டதால் அனந்தி சசிதரன் வெளிநடப்பு செய்ததுடன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.