காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படையினர் இருவருக்கு கொரோனா தொற்று நேற்று (16) இரவு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 21 வயதான பெண் கடற்படை உத்தியோகத்தர் ஒருவர் கடந்த 4ம் திகதி காங்கேசன்துறை புகையிரத நிலையத்திலிருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு கொழும்பு நோக்கி செல்லும் புகையிரதத்தில் 3ம் வகுப்பு பெட்டியில் பிரயாணம் செய்து காலை 11.30 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடைந்துள்ளார்.

பின்னர் அதேதினம் பிற்பகல் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து 4 மணிக்கு புறப்பட்டு காங்கேசன்துறை நோக்கி செல்லும் புகையிரதத்தில் 3ம் வகுப்பு பெட்டியில் பிரயாணம் செய்து இரவு 11.00 மணிக்கு காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை வந்தடைந்துள்ளார்.