யாழ். கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய விளையாட்டு மைதான நுழைவாயிலும், சிறுவர் விளையாட்டு முற்றமும் புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.ஞானபாஸ்கரோதய சங்கத் தலைவரின் தலைமையில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வின்போது பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒரு மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட விளையாட்டு மைதான நுழைவாயிலும், அமரர்கள் நடராஜா தங்கேஸ்வரி ஞாபகார்த்தமாக அவர்களின் குடும்பத்தினரால் அமைக்கப்பட்ட விளையாட்டு முற்றமும் திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர் மற்றும் கிராம மக்களும் கலந்து கொண்டனர்.