தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள கம்பஹா மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபா நிதியுதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் நாளை (19) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக 400 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள 75000 குடும்பங்களுக்கு இவ்வாறு நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

கடந்த 14 ஆம் திகதி கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத்தினால் நிதி அமைச்சில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, நிவாரணம் வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.