பிலியந்தலை-பெலன்வத்த பிரதேசத்தில் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனரென பிலியந்தல சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.தாயும் மகனொருவருமே இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், மகன் வௌ்ளவத்தை பிரதேசத்திலுள்ள தனியார் வங்கியொன்றில் கடமையாற்றுவதுடன், கொரோனா தொற்றுக்குரிய அறிகுறி காணப்பட்டதையடுத்து, இவருக்கு 16ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டதாகவும் இதன்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொற்றுக்குள்ளான தாய் ஹோமாகம வைத்தியசாலைக்கும் மகன் கொஸ்கம வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.