மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் இன்று காலை 9 மணியளவில் மத அனுஷ்டானங்களின் பின்னர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்ததாவது,

இது நான் விரும்பி அழுத்தங்களைப் பிரயோகித்து எனக்கு வழங்கப்பட்ட பதவியல்ல என்பதை நீங்கள் அனைவரும் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு சந்தோஷமான நிலையை மக்களுக்கு வழங்குவதற்கு எந்தவித வேறுபாடுகளுமின்றி மனப்பூர்வமாக உழைக்க வேண்டும். ஊடகவியலாளர்கள் கடந்த காலத்தில் மக்களுக்காக குரல் கொடுத்தீர்கள். தவறுகளை சுட்டிக்காட்டியமை எனக்குத் தெரியும். உங்களுக்கு நடந்த அச்சுறுத்தலும் எனக்குத் தெரியும். புதிய அரசு, புதிய நோக்கு அதற்காக எல்லோரும் உழைக்க வேண்டும்