பல்கலைக்கழக பரீட்சைகளை ONLINE மூலம் நடத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதென, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றால், பல்கலைக்கழக மாணவர்களின் கற்றல் செய்றபாடுகள் மற்றும் பரீட்சைகளை பாதிப்பின்றி முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர்  சம்பத் அமரதுங்க  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தல் விடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.