பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.தெஹிவலை பகுதியில் கைது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுமக்களின் பணத்தை தவறான முறையில் பயன்படுத்தல் மற்றும் தேர்தல் சட்ட திட்டங்களை மீறி கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிப்பதற்காக இடம்பெயர்ந்தோரை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் ஊடாக அழைத்து சென்ற குற்றச்சாட்டு தொடர்பில் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தல் விடுத்திருந்தார்.

அதனடிப்படையில் அவரை கைது செய்யவதற்காக 6 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.