பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை கைது செய்வதனை தடுக்கும் விதமாக செயற்பட்டு அவருக்கு அடைக்கலம் வழங்கிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களுள் பெண் வைத்தியர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 7 பேரையும் இன்று மாலை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.