ஆட்பதிவு திணைக்களத்தின் ஒருநாள் சேவை தொடர்பில் நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கிக் கொண்ட விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் தொடர்பில் குறித்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.தற்போது ஒருநாள் சேவையின் ஊடாக அடையாள அட்டையை பெற்று கொள்வதற்காக நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கிக் கொண்ட விண்ணப்பதாரர்கள் தாமதிக்காமல் தங்களுடைய விண்ணப்பங்களை கிராம சேவகர்களிடம் அல்லது பிரதேச செயலாளர் அலுவலகத்தில் உள்ள அடையாள அட்டை பிரிவிடம் ஒப்படைக்குமாறு குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.