உடன் அமுலுக்கு வரும் வகையில் மட்டக்குளி, கிராண்ட்பாஸ், வெல்லம்பிட்டிய, முகத்துவாரம், புளுமெண்டல் ஆகிய பிரதேசங்களுக்கான தனிமைப்படுத்தும் ஊரடங்கு சட்டம் நடைமுறை படுத்தப்பட்டு உள்ளதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

மறு அறிவித்தல் வரையில் இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

கொழும்புக்குள் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கொட்டாஞ்சேனை பகுதிக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று மாலை 6 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.